கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - மீன்பிடிக்க தடை

இலங்கை கடற்பகுதியில் எரிந்து விபத்துக்குள்ளான சரக்கு கப்பல், கடலில் மூழ்கிவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.
கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - மீன்பிடிக்க தடை
x
 சிங்கப்பூரை சேர்ந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பல், இலங்கை கடற்பகுதியில், பற்றி எரியத் தொடங்கியது. இதனால், கப்பலில் இருந்த ரசாயனங்கள் கடலில் கொட்டி, மாசு ஏற்பட்டது. தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், கப்பல் மூழ்கத் தொடங்கியது. இந்நிலையில், அந்த சரக்கு கப்பல் மூழ்கிவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மாசு காரணமாக, 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்