விண்வெளியில் விவசாயம்... - ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி வீரர்கள்...

விண்வெளியில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டும் வீரர்கள்... அடுத்தக்கட்ட ஆய்வுக்கு ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி ஆய்வு மையம் குறித்து பார்க்கலாம்.
விண்வெளியில் விவசாயம்... - ஆர்வம் காட்டும் நாசா விண்வெளி வீரர்கள்...
x
பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்.அங்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு பூமியில் இருந்து உணவுப் பொருட்களும்; வைட்டமின் மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த முறையை மாற்ற முயற்சிக்கும் நாசா, விண்வெளியில் விவசாயம் திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது.நாசாவின் இந்த முயற்சிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பலனும் கிடைத்தது.விண்வெளி மையத்தில் வீரர்கள் கீரையை வளர்த்து அசத்தியிருந்தனர்.புவி ஈர்ப்பு விசையில்லாத விண்வெளியில் காய்கறிகளை வளர்க்க செயற்கை சூரிய வெளிச்சத்தை வழங்கும் குளிர்சாதனப் பெட்டி போன்று இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறது.அந்த பெட்டியுடன் சிவப்பு கீரையின் விதைகளும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அப்பெட்டியில் தலையணை போன்ற கட்டமைப்பின் மீது விதைகளை தூவிய வீரர்கள், தேவையானபோது சிறிதளவு தண்ணீரை ஊற்றி வளர்த்தனர்...கீரை நன்றாக வளர்ந்ததும் அதனை வீரர்கள் சாப்பிடும் வீடியோவை நாசா வெளியிட்டிருந்தது.பின்னர் அதே முறையில் சிறிதளவு மண் சேர்த்து, காய்கறிகளை விஞ்ஞானிகள் பயிரிட்டனர். அதில் பிற செடிகள் அழுகினாலும், முள்ளங்கி மட்டும் விளைந்து வெற்றிக்கனியாக கிட்டியது.இதனையடுத்து காய்கறிகளை வளர்க்கும் திட்டத்தை படிப்படியாக விஸ்தரிக்கிறது நாசா.
இதற்காக புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் விஞ்ஞானி ஜியோயா மாஸா தலைமையிலான குழு தீவிர ஆய்வை மேற்கொள்கிறது. இக்குழுவுக்கு விண்வெளியில் இருக்கும் வீரர்கள், செடிகளின் வேர்கள் செல்லும் முறை மற்றும் வளர்ச்சி குறித்த தகவல்களை அனுப்பி வருகிறார்கள். உண்மையில் நமக்கு தேவையான காய்கறிகளை நாமே வளர்த்து உண்பது ஆரோக்கியமானது. இதனை விண்வெளியில் சாத்தியமாக்க துடிக்கும் நாசா, காய்கறி செடிகளை வீரர்களின் மன மாற்றங்களை ஆய்வு செய்கிறது. ஆரம்பக்கட்ட முடிவில் செடிகளை வளர்ப்பதை வீரர்கள் மிகவும் நேசிப்பதாக தெரியவந்துள்ளது.  அவர்கள் தங்கள் வேலை நேரம் போக செடிகளை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்றும் செடிகள் வளர்ப்பை அர்த்தமற்றதாக அவர்கள் எண்ணவில்லை என்றும் நாசா தெரிவித்து உள்ளது. தனது செவ்வாய் கிரக ஆய்வு உள்பட பிற எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு நுட்பமான உணவு முறையை வடிவமைப்பதற்கு ஆய்வு உதவும் என நாசா நம்பிக்கை தெரிவிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்