உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு - பிரிட்டனை மிரட்டும் 'டெல்டா' வகை வைரஸ்

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், ஜூன் 21ல் ஊரடங்கை தளர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுபற்றி பார்க்கலாம்...
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு - பிரிட்டனை மிரட்டும் டெல்டா வகை வைரஸ்
x
பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஜூன் 21 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். பிரட்டன், போரிஸ் ஜான்சன், உருமாறிய கொரோனா வைரஸ், ஊரடங்கு கட்டுபாடுகள் டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள பி.1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல்கள், சமீப வாரங்களில் அதிகரித்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடாது என்று பல்வேறு நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.தற்போது ஏற்படும் தினசரி தொற்றுதல்களில், 75 சதவீதம் வரை டெல்டா வைரஸினால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தடுப்பூசி மற்றும் நோய் கட்டுப்பாடுக்கான கூட்டுக் குழு கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் 38 சதவீதமாகவும், ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படாதவர்கள் விகிதம் 41 சதவீதமாகவும் உள்ளது.
தடுப்பூசி விநியோகம் முழுமையடையாமல், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால், டெல்டா ரக வைரஸினால் மூன்றாவது அலை உருவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.டெல்டா ரக வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 21க்கு பிறகு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்