சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் - 6 நாட்கள் தடைபட்ட சரக்கு போக்குவரத்து

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டி, 6 நாட்கள் போக்குவரத்து தடை பட்டதற்கு கப்பல் கேப்டனே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் - 6 நாட்கள் தடைபட்ட சரக்கு போக்குவரத்து
x
எகிப்து நாட்டில் உருவாக்கப்பட்ட, உலகப் புகழ்பெற்ற சூயஸ் கால்வாய், ஆசியாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு உள்ள ஒரே ஒரு கடல் வழி பாதையாகும். உலகின் மொத்த சரக்கு போக்குவரத்த்தில் 10 சதவீதம் இதன் வழியாக செல்கிறது.கடந்த மார்ச் 23ஆம் தேதி சூயஸ் கால்வாயில் பயணித்த எவெர்கிரீன் என்ற மிகப் பெரிய சரக்கு பெட்டக கப்பல், எதிர்பாராத விதமாக தரைதட்டி, குறுக்குவசமாக திரும்பி, சேற்றில் சிக்கிக்கொண்டது.
ஆறு நாட்கள் முயற்சிக்கு பின், 2 லட்சம் டன்கள் எடை கொண்ட எவெர்கீர்ன் கப்பல் மீட்கப்பட்டு, அதன் பிறகு சூயிஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.இந்த ஆறு நாட்களில், தினமும் சராசரியாக 870 கோடி ரூபாயில் இருந்து 1088 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை சூயஸ் கால்வாய் நிர்வாகம் எதிர் கொண்டது.இந்த விபத்து பற்றி தீவிர விசாணை மேற்கொண்ட சூயஸ் கால்வாய் நிர்வாகம், இதற்கு முழு காரணம், இந்த கப்பலின் கேப்டன் தான் என்றும், அவர் அவசர அவசரமாக இட்ட தவறான ஆணைகளினால் எவெர்கிரீன் கப்பல் தரை தட்டியது என்றும் கூறியுள்ளது.எவெர்கீரின் கப்பலின் கருப்பு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இதை உறுதி செய்வதாகவும், சூயிஸ் கால்வாய் நிர்வாகத்தின் மீது தவறுகள் எதுவும் இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் இந்த விசாரணையை மேற்கொண்ட குழுவின் தலைவர் சையத் சூவைஷா கூறியுள்ளார்.எவெர்கீர்ன் கப்பலை கையகப்படுத்தியுள்ள சூயிஸ் கால்வாய் நிர்வாகம், அதன் உரிமையாளர்களிடம், ஆறு நாட்கள் வருவாய் இழப்பிற்காக 6,645 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தது. பின்னர் இதை 3,990 கோடி ரூபாயாக சமீபத்தில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. 
Next Story

மேலும் செய்திகள்