வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷி ஆண்டிகுவாவில் கைது
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியை, இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக ஆண்டிகுவா பிரதமர் கூறி உள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியை, இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக ஆண்டிகுவா பிரதமர் கூறி உள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்ஷி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆண்டிகுவாவிற்கு தப்பி ஓடினார். ஆண்டிகுவாவில் வசித்து வந்த மெகுல் சோக்ஷியை காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த தகவலை ஆண்டிகுவா அரசும் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், மாயமான மெகுல் சோக்ஷி, டொமினிகாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பேசிய ஆண்டிகுவா பிரதமர் பிரவுன், சோக்ஷி படகுமூலம் டொமினிகா சென்று இருக்கலாம் என்றும், அவரை டொமினிகா அரசு கைது செய்து இருப்பதாகவும் கூறினார். கைதாகி உள்ள சோக்ஷியை, மீண்டும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டாம் என்றும், சோக்ஷியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொமினிகா பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். மெகுல் சோக்ஷியை இந்தியாவிற்கு அனுப்பும் திட்டத்தை டொமினிகா அரசு ஏற்று இருப்பதாகவும், ஆண்டிகுவா பிரதமர் பிரவுன் தெரிவித்து உள்ளார்.
Next Story

