அதிக பணி நேரத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அதிக நேரம் பணியில் ஈடுபடுவதால், இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு அதிக அளவு மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
அதிக பணி நேரத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
அதிக நேரம் பணியில் ஈடுபடுவதால், இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு அதிக அளவு மரணங்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. கொரோனா அச்சத்தால் பலரும் வீட்டில் இருந்து பணிபுரியும் நிலையில், பல்வேறு காரணங்களால் பணி நேரம் அதிகமாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தொடர்ச்சியாக அதிக நேரம் பணியில் ஈடுபடுவதால், அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி ஃபிராங்க் பெகா கூறி உள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இதய நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 42 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும். இந்த உயிரிழப்புகளுக்கு அதிக நேரம் பணிபுரிவதும் காரணமாகிறது என்று அவர் கூறினார். பத்தில் ஒரு நபர், வாரத்தில் 55 மணி நேரத்துக்கும் அதிகமாக பணிபுரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம், மேற்கு பசுபிக் பிராந்தியம், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசிப்போர் அதிக நேரம் பணி புரிந்து பாதிக்கப்படுவதாகவும். பல்வேறு நாடுகளில் முழு ஊரடங்கு காரணமாக, 10 சதவிகிதம் அளவுக்கு பணி நேரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், ஃபிராங்க் பெகா கூறி உள்ளார்.  கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட, பணி நேரத்தை அதிகரிக்காமல் இருப்பதே சிறந்த முடிவு என்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்