இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை
பதிவு : மே 12, 2021, 01:11 PM
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.கேரளாவை சேர்ந்த 31 வயதான சௌமியா என்ற பெண் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு ராக்கெட்களை இஸ்ரேல் பாதுகாப்பு ஏவுகனைகள் தடுத்து அழித்தன. சில ராக்கெட்டுகள் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்த‌தாக தெரிகிறது. இதில் சௌமியா உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். சௌமியாவுக்கு சந்தோஷ் என்ற கணவரும், 9 வயது மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலின் லோட் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலமில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு போலீசார் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள லோட் நகரில் யூதர்களின் வீடுகள், கடைகள், கார்களுக்கு அரேபியர்கள் தீ வைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான ராக்கெட் வீச்சு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. தாக்குதலில் 32 பாலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பும் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1882 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

67 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

46 views

பிற செய்திகள்

இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்

இஸ்ரேல் தடுப்பூசிகள் நிராகரிப்பு... திருப்பி அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்

21 views

வற்றத் தொடங்கும் நீர்நிலைகள்.. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை உச்சம் தொட்டுவரும் நிலையில், கலிபோர்னியா மாகாணத்தின் 2-வது மிகப் பெரிய ஏரி வற்றத் தொடங்கி உள்ளது.

19 views

சீன தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா... நாளொன்றுக்கு 5 மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் சீன கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட 350-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று நேரிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8842 views

விண்வெளியில் அமெரிக்கா, சீனா போட்டி.. போட்டியை சமாளிக்க தயாராகும் நாசா

விண்வெளித் துறையில் சீனாவுடன் போட்டியிட, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நாசா நிறுவன தலைவர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

16 views

வெப்ப அலையில் சிக்கியுள்ள மேற்கு அமெரிக்கா.. வறட்சியை எதிர்கொண்டுள்ள விவசாயிகள்

அமெரிக்காவின் மேற்கு பகுதி மாகாணங்கள் மிக அதீத வெப்ப அலையில் சிக்கியுள்ளன.

17 views

அழியும் நிலையில் கோலா கரடிகள்.. காக்கும் நடவடிக்கையில் ஆஸி. அரசு

அழியில் நிலையில் உள்ள கோலா கரடிகளை காப்பாற்றும் இறுதிக்கட்ட முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு இறங்கியுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.