கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு
x
கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், நாடுகள் தங்களுடைய தடுப்பூசி மருந்து கண்டிபிடிப்புக்கு உலக வர்த்தக அமைப்பிடம் அறிவுசார் காப்புரிமை பெறுகின்றன. இந்த உரிமையை குறிப்பிட்ட நாடோ, நிறுவனமோ பெறும்போது ஒப்பந்தம் இல்லாமல், அந்த தடுப்பூசியை தயாரிக்கவோ, சந்தைப்படுத்தவோ யாருக்கும் உரிமையில்லை. தற்போது கொரோனா நெருக்கடியான சூழலில் லாபம் ஈட்டுவது முக்கியமானது அல்ல, மனித உயிரிகள் காப்பாற்றப்பட வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய காப்புரிமை வழங்கலை நிறுத்த வேண்டும் என இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க பைடன் நிர்வாகமும் ஆதரவு தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்