அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து... இணையவழியில் தாக்குதல் என தகவல்

ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் அணு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு பயங்கரவாத செயலே காரணம் என அந்நாட்டு அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து... இணையவழியில் தாக்குதல் என தகவல்
x
ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் அணு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு பயங்கரவாத செயலே காரணம் என அந்நாட்டு அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியுள்ளது. இந்த ஆலையில் நேற்று நேரிட்ட பயங்கர வெடி விபத்தால் ஆலையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால் மின் வினியோகம் தடைபட்டது என்றும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் வாயு கசிவு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் இணையவழியில்   தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஈரானிய அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் அலி அக்பர், இச்சம்பவத்தை அணு பயங்கரவாதம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் ஊடகம் ஒன்று, இது இஸ்ரேலிய சைபர் தாக்குதல் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்