தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது

கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.
தடுப்பூசி எடுத்துக் கொண்டார் கொலம்பிய அதிபர்... ஆஸ்ட்ரா ஜெனிகா செலுத்தப்பட்டது
x
கொலம்பிய அதிபர் இவான் ட்யூக் ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டார். ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தன. இந்நிலையில், மக்களுக்கு ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கொலம்பிய அதிபர் அந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். அந்நாட்டில் சுமார் 23 லட்சம் பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 61 ஆயிரத்து 771 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிட்டத்தட்டம் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கொலம்பியாவில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்