உலக நாடுகளில் கொண்டாட்டம் எப்படி? காதலர் தின சுவாரஸ்ய தகவல்கள்

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
உலக நாடுகளில் கொண்டாட்டம் எப்படி? காதலர் தின சுவாரஸ்ய தகவல்கள்
x
காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

நம்மூர்களில் காதலர் தினம் என்பது கடற்கரை, பூங்கா, சினிமா மற்றும் சொகுசு விடுதிக்கு செல்வதுடன் முடிந்துவிடுகிறது.பெரும்பாலானோருக்கு வழக்கமான ஒருநாளாகவே செல்கிறது. ஆனால், இந்நாளை ரசித்தும், உற்சாகமாக கொண்டாடும் நாடுகளும் உள்ளன. அவ்வாறு சில நாடுகளில் தொடரும் பாரம்பரிய வழக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம். டென்மார்க்கில் 1990 முதலே காதலர் தினத்துக்கு தேசிய விடுமுறையே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஆண்கள் தங்களுடைய காதலிக்கு டேனிஷ் ட்விஸ்ட் என்ற ரொட்டியை தயாரித்து வழங்குவதும், பெயர் இல்லாது வரும் நகைச்சுவை காதல் அட்டையை அனுப்பிய ஆண் யார் என்பதை பெண்கள் கண்டுபிடிப்பதும் வழக்கமாக இருக்கிறது.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் உலகின் காதல் நகரம் என்ற சிறப்பை கொண்டிருக்கிறது. இங்குதான் முதலாவதாக காதலர் தின வாழ்த்து அட்டை வெளியானதாக கருதப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் காலத்திலும் அங்கு வாழ்த்து அட்டைகள் மவுசு குறையாமலே இருக்கிறது.தென் கொரியாவில் மிகவும் சுவாரஸ்யமாக பிப்ரவரி 14 தொடங்கி ஏப்ரல் 14 வரையில் கொண்டாட்டம் நீடிக்கிறது. காதலர் தினத்தில் பெண்கள் ஆண்களுக்கும், வெள்ளை தினமான மார்ச் 14-ல் ஆண்கள் பெண்களுக்கும் பரிசை வழங்குவர். ஜோடி கிடைக்காதவர்கள் ஏப்ரல் 14-ல் கறுப்பு பீன்ஸில் செய்யப்பட்ட நூடுல்ஸ்ஸை சாப்பிட்டு தனிமையை கொண்டாடுவார்கள்.இதில் மாற்றமாக பிரிட்டனின் வேல்ஸில் செயின்ட் ட்வைன்வென் நினைவு நாளான ஜனவரி 25-ல் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஆண்கள் தங்களுடைய காதலிக்கு கலைநயம் கொண்ட மரத்தாலான ஸ்பூனைப் பரிசாக வழங்குகிறார்கள்.. இந்த வழக்கம் 17-ம் நூற்றாண்டிலிருந்து அங்கு இருக்கிறது.இங்கிலாந்து நாட்டில் பெண்கள் இந்நாளில் பிரியாணி இலையை தலையணைக்கு கீழ் வைத்து தூங்குகிறார்கள். அப்படி தூங்கும் போது கனவில் தங்களுடைய எதிர்கால கணவர் வருவார் என நம்புகிறார்கள்.இதுபோன்று இத்தாலியில் பெண்கள் காதலர் தினத்தில் விடியற்காலையில் சந்திக்கும் முதல் ஆண் கணவராக வருவார் என நம்புகிறார்கள்.தென் ஆப்பிரிக்காவில் பெண்கள்  காதலர் தினத்தில் தங்களுக்கு பிடித்த ஆணின் பெயரை உடுத்தும் உடையில் எழுதிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விசித்திர நம்பிக்கைகள் உலா வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்