அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு

அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு
x
அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு

அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையின் அளவு, கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அதிகரித்து வருகிறது. 2021இல் பட்ஜெட் பற்றாக்குறையின் அளவு 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர்களாக அதிகரிக்கும் என்று அமெரிக்க  நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.  அமெரிக்க அரசின் மொத்த கடன் அளவு, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவோடு ஒப்பிடுகையில் 107 சதவீதமாக அதிகரிக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. பட்ஜெட் பற்றாகுறைகளை ஈடுகட்ட, அமெரிக்க அரசு வெளி சந்தையில் டாலர்களை கடன் வாங்கியும், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் மூலம் புதிய டாலர்களை அச்சடித்தும் நிதி திரட்டுகிறது

புத்தாண்டு பிறப்பு - வசந்தகால திருவிழா.... கண்கவர் கலை நிகழ்ச்சிகள்... கண்டு ரசித்த பார்வையாளர்கள் 

சீனாவில், புத்தாண்டை வரவேற்று நடத்தப்பட்ட வசந்தகால திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்தது. பல வண்ண ஆடைகள் அணிந்த படி நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சிகள், மாயாஜாலங்கள், நாடகம், மற்றும் இசைக்கருவி வாசிப்பு என நிறைவு விழா, களை கட்டியது. அதனை அனைவரும், மகிழ்ச்சியுடன் கைதட்டி ரசித்து மகிழ்ந்தனர்.  


பாப் பாடகி ஜேனட் ஜாக்சனின் கண்கவர் ஆடைகள் - ஏலத்திற்கு விட்டு நிதி திரட்ட முடிவு... பாடகியின் ஆடைகளை ஏலத்தில் எடுக்க ஆர்வம்

பிரபல பாப் பாடகியும், மைக்கேல் ஜாக்சனின் தங்கையுமான ஜேனட் ஜாக்சன், நடனத்தின் போது பயன்படுத்திய உடைகள் மற்றும் அணிகலன்களை ஏலத்தில் விட முடிவு  செய்துள்ளார். இதற்காக தமது திருமண உடை உள்ளிட்ட ஆயிரம் ஆடைகளை ஜூலியன் எனும், பிரபல ஏல நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, குழந்தைகள் நல திட்டங்களுக்கு அளித்திட வேண்டும் என்றும் ஜேனட் ஜாக்சன் கேட்டு கொண்டுள்ளார். ஜேனட் ஜாக்சன் நடனத்தின் போது பயன்படுத்தும் ஆடை ஒன்று மட்டும், ஐம்பதிலிருந்து 70 டாலர்கள் வரை அதாவது இந்திய மதிப்பில், 51 லட்சம் ரூபாய் நிதி திரட்டும் என்பது ஏல நிறுவனத்தாரின் மதிப்பீடு ஆகும். வருகிற மே மாதம் ஏலம் நடத்தப்பட உள்ளது. 

வேகமாக பரவும் கொரோனா தொற்று ....மெல்போர்னில் 5 நாட்கள் ஊரடங்கு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த 13க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விக்டோரியா மாகாணம் முழுவதும் 5 நாட்கள்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர்ந்து நடைபெறும்  என்றும் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 

தன்னம்பிக்"கை"யால் உயர்ந்த 16 வயது சிறுமி...இரு கைகளும் இல்லாத போதும் சாதனை
 
இரு கைகள் இல்லாத போதும் சாதனை படைத்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த 16 வயதே நிரம்பிய சிறுமி பெல்லரினா. பிறக்கும்போதே இரண்டு கைகளும் அற்று பிறந்த பெல்லரினா, இன்று சமூக வலைதளங்கள் மூலமாக தன் திறமையின் மூலம் பலருக்கு முன்மாதிரியாக விளங்கிகிறார். தன்னம்பிக்"கை" மட்டும் இருந்தால் போதும், இரு கைகள் கூட தேவையில்லை என்று நிரூபித்துள்ளார் பெல்லரினா.


Next Story

மேலும் செய்திகள்