அமெரிக்காவில் எச்1 பி விசா பதிவு : அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு

அமெரிக்காவில் 2022 -ம் ஆண்டுக்கான எச் ஒன் பி, விசாக்களுக்கான பதிவுகள் வரும் மார்ச் மாதம், 9 ஆம் தேதி முதல் துவங்கும் என, அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் எச்1 பி விசா பதிவு : அடுத்த மாதம் 9-ந் தேதி தொடக்கம் - அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு
x
அமெரிக்காவில் 2022 -ம் ஆண்டுக்கான எச் ஒன் பி, விசாக்களுக்கான பதிவுகள் வரும் மார்ச் மாதம், 9 ஆம் தேதி முதல் துவங்கும் என, அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது.புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் எச்1பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என அறிவித்தார். இந்த உத்தரவால் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவில் 2022-ம் ஆண்டுக்கான எச்1பி விசாக்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் 9-ந் தேதி முதல் தொடங்கும் என்று அமெரிக்க குடியேற்ற துறை அறிவித்துள்ளது. இது குறித்து அத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 31-ந் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்