கொரோனா நிவாரண மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் - அமெரிக்கர்களுக்கு தலா ரூ. 44,000 நிவாரணம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நீண்ட இழுபறிக்கு பின்னர் கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா நிவாரண மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் - அமெரிக்கர்களுக்கு தலா ரூ. 44,000 நிவாரணம்
x
அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்து, நாடாளுமன்றத்தில் கொரோனா நிவாரண மசோதா நிறைவேறியது. ஆனால், இந்த மசோதா சட்டமாக டிரம்ப் கையெழுத்திட மறுத்தார். இதில் வெளிநாட்டவர்களே அதிகமாக பயன் அடைகிறார்கள் என குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்கர்களுக்கு நிவாரண தொகையாக இந்திய மதிப்பில் வழங்கப்படும்  44 ஆயிரம் ரூபாயை 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜனவரியில் பதவியேற்க உள்ள பைடன், பேரிழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரித்து டிரம்ப் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்