மெக்சிகோ : கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரம்

மெக்சிகோ நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மெக்சிகோ : கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரம்
x
மெக்சிகோ நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 24ம் தேதி இந்தப் பணி தொடங்கியது. கொரோனா வைரஸின் அதிவேக பரவலால், மருத்துவமனைகள் திணறின. இந்நிலையில், மெக்சிகோ நகரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு ஃபைசர் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. முதல் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 21வது நாளில் இரண்டாவது தடுப்பு செலுத்தப்பட உள்ளது. 

இத்தாலி : மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் பரவல்

இத்தாலி நாட்டில் கொரோனா தொற்று பரவல், மீண்டும் வேகமெடுத்துள்ளது. இத்தாலியில், நேற்று ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரொனால்டோவுக்கு நூற்றாண்டின் தலைசிறந்த வீரர் விருது

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நூற்றாண்டின் தலைசிறந்த வீரராக தேர்வாகி இருக்கிறார். லியோனல் மெஸ்ஸி, முகமது சாலா மற்றும் ரொனால்டினோ ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, ரொனால்டோ இந்த விருதைத் தட்டிச் சென்றார். துபாயில் நடந்த சர்வதேச சாக்கர் விருது நிகழ்ச்சியில், அவர் கவுரவிக்கப்பட்டார். மேலும், போலாந்தைச் சேர்ந்த ராபர்ட் லெவண்டோஸ்கி, நடப்பாண்டின் சிறந்த கால் பந்தாட்ட வீரருக்கான விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டார்.  

புத்தாண்டுக்கு தயாராகும் ரஷ்யா - மின்னொளியில் மின்னிய மாஸ்கோ நகரம் 

புத்தாண்டுக்குத் தயாராகும் வகையில், ரஷ்யாவின் மாஸ்கோ நகரம் மின்னொளியில் மின்னியது. நகரின் முக்கிய பகுதிகளான கிரெம்ளின் மாளிகை, செஞ்சதுக்கம், பால்ஷாய் திரையரங்கம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் அலங்கார வேலைப்பாடுகளை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.Next Story

மேலும் செய்திகள்