இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி...? - அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என தகவல்

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு முதன் முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி...? - அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என தகவல்
x
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்தியாவில் இந்த மருந்தை தயாரித்து வழங்கும் சீரம் நிறுவனம் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்திருக்கிறது. மேலும், தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து எந்த நேரத்திலும் அனுமதி வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  அப்படி இங்கிலாந்தில் அனுமதி வழங்கப்பட்டால், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு அவசரக் கூட்டத்தை கூட்டி தடுப்பூசியின் பரிசோதனைகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரவுகளை ஆய்வு செய்யும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பின்னர் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அனேகமாக அடுத்த வாரம் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து விடும் என்றும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்