வனப்பகுதிகளில் பற்றிய திடீர் காட்டுத் தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்

அமெரிக்காவின் கலிபோர்னியா வனப்பகுதிகளில் திடீரென பற்றிய காட்டுத்தீயை, அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வனப்பகுதிகளில் பற்றிய திடீர் காட்டுத் தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்
x
காட்டுத்தீயில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் இருந்த மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சாம்பலாயின. வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் வசித்து வந்த 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 

நுரை பொங்கிய ஆற்று நீர் - சோதனை செய்ய முடிவு

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில், டுடர்கோஃப்கா ஆற்றில், திடீரென நுரை பெருக்கெடுத்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், ரஷ்ய மாசுகட்டுப்பாட்டு துறை, ஆற்று நீரை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவல் எதிரொலி - வீழ்ச்சி அடைந்த கிறிஸ்துமஸ் சாக்லெட் விற்பனை

கொரோனா தாக்கம் காரணமாக, ஹங்கேரி நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சாக்லெட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 8 மில்லியன் சான்டா சாக்லெட்களும், 3 ஆயிரத்து 500 டன் அளவில் மற்ற சாக்லெட்களும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆனால் தற்போது அது வெகுவாக சரிந்துள்ளதாக வியாபாரிகள்  கூறியுள்ளனர். 

கிறிஸ்துமஸ் பண்டிகை  கோலாகலம் - குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற சான்டா கிளாஸ்கள்...

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் , கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சான்டா கிளாஸ் வேடமணிந்த நபர்கள், மருத்துவமனையின் ஜன்னல் வழியாக தோன்றி குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளும், அவர்களது உறவினர்களும், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர், ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

குப்பைத்தொட்டி பார்சலில் கிடந்த பூனை
காப்பாற்றிய ஊழியரை கவுரவம் செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம்
பூனையை அமைச்சரின் இருக்கையில் அமர வைத்து புகைப்படம் 

ரஷ்யாவில், குப்பை தொட்டிக்குள் பார்சல் கிடந்த பூனை, தற்போது அமைச்சரின் இருக்கையில் அமரும் தகுதியை பெற்றுள்ளது. குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியின் போது, மறு சுழற்சி இயந்திர பெல்ட்டில், கிடந்த பார்சலில்  இருந்த பூனையை தூய்மை பணியாளர் காப்பாற்றி உள்ளார். இந்த விவகாரம் பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றது. இந்நிலையில், அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம், பூனையையும் அதனை காப்பாற்றிய ஊழியரையும் அழைத்து பாராட்டியுள்ளது. அப்போது அந்த பூனை, அமைச்சரின் இருக்கையில் அமர வைக்கப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்