வாட்டிகனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை

வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
வாட்டிகனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை
x
புகழ்பெற்ற செயின்ட் பீட்டர் சதுக்கத்தில்100-க்கும் குறைவானவர்களுடன் பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் செய்தியை வாசித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ், இறைமகன் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் அவதரித்து, ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை உலகிற்கு உணர்த்தினார் என்று கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இறைவன் மீதான அன்பை வெளிப்படுத்துவோம் என்ற  பிரான்சிஸ், கிறிஸ்துமஸ் தினத்தன்று நமது உடமைகள் மீதான முடிவற்ற ஆசையை தவிர்த்து, நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நிற்போம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்