பைடன் வெற்றிக்கு டிரம்ப் தரப்பு எதிர்ப்பு - டிரம்ப் தரப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு மேலும் ஒரு பின்னடைவாக, பைடனின் 4 மாகாண வெற்றிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பைடன் வெற்றிக்கு டிரம்ப் தரப்பு எதிர்ப்பு - டிரம்ப் தரப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
x
ஜார்ஜியா, மிசிகன், பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 4 மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டெக்சாஸ் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் கென் பாக்டான் தாக்கல் செய்த இந்த வழக்கில், குறிப்பிட்ட 4 மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் மோசடி தொடர்பாக முழுமையாக விசாரிக்கும் வரையில், வெற்றிக்கான சான்றிதழை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்ட 9 நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். டிரம்புக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்