கிறிஸ்துவ ஆலயத்தில் பயங்கர தீ விபத்து - 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயம்

அமெரிக்காவில் கிறிஸ்துவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்துவ ஆலயத்தில் பயங்கர தீ விபத்து - 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயம்
x
அமெரிக்காவில் கிறிஸ்துவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க் நகரில் 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிக பழமையான கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென என எரிந்த தீயை அணைக்க போராடிய வீரர்களில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீ பிடித்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.    Next Story

மேலும் செய்திகள்