போர் பதற்றம் - அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்

வட கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான பொது மக்கள் அகதிகளாக அண்டை நாடான சூடனுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.
போர் பதற்றம் - அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்
x
வட கிழக்கு ஆப்பரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்து வருவதால், ஏராளமான பொது மக்கள், அகதிகளாக அண்டை நாடான சூடனுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். எதிர்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள திக்ரெ பகுதியின் மீது இறுதிக் கட்ட தாக்குதலை தொடுக்க போவதாக எதியோப்பியா பிரதமர் அபி அகமது அறிவித்துள்ளார். மெக்கெல் நகரில் உள்ள 5 லட்சம் பேருக்கு தீங்கு ஏற்படாமல் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தும் என்று அவர் கூறியுள்ளார்.  இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டால் பெரும் அழிவு ஏற்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. எதியோப்பியாவிற்கும், எரித்திரியாவிற்கும் 20 ஆண்டுகளாக நடைபெற்ற எல்லை பிரச்சனைகளை முடித்து வைத்தற்காக,  2019இல் எதியோப்பிய பிரதமர் அபி அகமதுவிற்கு சமாதனாத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்