ஜனவரியில் நாடு திரும்பும் அமெரிக்க படைகள் - ஈரான், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது

2021 ஜனவரியில் ஆப்கானிஸ்தானில் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 500 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் நாடு திரும்பும் அமெரிக்க படைகள் - ஈரான், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுகிறது
x
2021 ஜனவரியில் ஆப்கானிஸ்தானில் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை 2 ஆயிரத்து 500 ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்துள்ளார்,. அதேபோல் ஈராக்கில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்,. 

ஒரே வாரத்தில் மூன்றாவது அதிபர் பொறுப்பேற்பு
 
பெரு நாட்டில் பதட்டம் நீடிக்கும் நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது அதிபர் பொறுப்பேற்றுள்ளார். நவம்பர் 9ஆம் தேதி, பெரு நாட்டின் அதிபராக இருந்த மார்ட்டின் விஸ்சரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பதவி பறிக்கப்பட்டது. இதனால், நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அதிபராக பொறுப்பேற்ற மானுவேல் மெரினோவும் ஐந்தே நாட்களில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அரசியல் பதட்டத்தை சமாளிக்க, சென்ட்ரிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சகாஸ்டி இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.  

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு பலி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையிலேயே திணறிவந்த இத்தாலியில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 731 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஸ்பெயினிலும் 435 பேர் உயிரிழந்துள்ளனர். 

போராட்டக்காரர்களை விரட்டி அடித்த போலீசார் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி

தாய்லாந்து நாட்டில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். அங்கு மன்னராட்சியில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தக் கோரியும், பிரதமர் பதவி விலகக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர். அவர்கள் தடையை மீறி செல்ல முயன்றதால், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். இதில் ஒரு போலீசார் உட்பட 18 பேர் காயமடைந்தனர். 

எரிவாயு லாரி கவிழ்ந்து வெடித்து கோர விபத்து

மெக்சிகோ நாட்டில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நயாரித் மற்றும் ஜலிஸ்கோ மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள், தற்போது வெளியாகி உள்ளன. 

மத்திய அமெரிக்காவை புரட்டி எடுத்த லோடா புயல் - 80 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுரஸ், லோடா புயலால் மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. சூறைக் காற்றுடன் கனமழையும் கொட்டித் தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய லோடா புயல் காரணமாக, 80 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

லண்டனில் நடைபெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின், லீக் ஆட்டத்தில், கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ரஷியாவின் ரூப்லெவ்வை எதிர்க்கொண்டார். போட்டியின் முடிவில் 6க்கு 1, 4க்கு 6 மற்றும் 7க்கு 6 என்ற செட் கணக்கில், சிட்சிபாஸ் வெற்றி பெற்றார். 









Next Story

மேலும் செய்திகள்