மாவீரர் தின ஏற்பாடு- இலங்கை ராணுவம் கெடுபிடி"- இலங்கை எம்.பி.க்கள் புகார்

மாவீரர் தினத்துக்கான ஏற்பாடுகளை செய்யவிடாமல் இலங்கை ராணுவம் கெடுபிடி செய்வதாக அந்நாட்டு எம்.பி.க்கள் குற்றம் சாட்டுகின்றனர்
மாவீரர் தின ஏற்பாடு- இலங்கை ராணுவம் கெடுபிடி- இலங்கை எம்.பி.க்கள் புகார்
x
போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் பகுதியில் மாவீரர் துயிலும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி., செல்வராஜா கஜேந்திரன், ,பார்வையிட சென்றார். அவரை  ராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது, கடந்த ஆண்டு அனுமதி வழங்கிய நீங்கள், இலங்கை அதிபராக கோட்டாபய ராஜபக்சே உள்ளதால், அனுமதி மறுப்பதா என செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். இதனால்  இரு தரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதேபோல, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகபுரத்தில் உள்ள துயிலும் இல்லத்தை பார்வையிட சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி., ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினரையும் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்