ரூ.14 கோடிக்கு ஏலம் போன பெல்ஜியம் பந்தய புறா - அதிக தொகைக்கு ஏலம் போய் உலக சாதனை
பெல்ஜியத்தை சேர்ந்த பந்தய புறா ஒன்று 14 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.
நியூ கிம் என்று அழைக்கப்படும் 2 வயதான அந்த பந்தய புறா, 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு பந்தயத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புறாவை வாங்க 18 ஆயிரம் ரூபாயுடன் தொடங்கிய ஏலம் 90 நிமிடங்களில் 14 கோடி ரூபாயாக அதிகரித்தது. சீனாவை சேர்ந்த 2 பணக்காரர்கள் அந்த புறாவை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
"டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது"
டிரம்ப் ஈகோவை கைவிட வேண்டும் - பாரக் ஒபாமா
அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தும் டிரம்ப் அதை ஏற்காமல் பேசி வருகிறார். எனவே, டிரம்ப் தனது ஈகோவை விட்டுவிட்டு நாட்டின் நலனை முதலில் வைக்கும் நேரம் வந்துவிட்டது என ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது"
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரையன் தகவல்
தற்போதைய நிலையில், ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது என்று டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டால் அவருக்கு தொழில்நுட்ப ரீதியாக இணைந்து செயல்படுவேன் எனவும் ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்
அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை"
"முன்னணி நிறுவனங்கள் கைகொடுக்க தயார்"
நிறுவன தலைவர்களுடன் ஜோ பைடன் ஆலோசனை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னணி நிறுவனங்களுக்கு கைகொடுக்க தயாராக உள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்ட் கார்ப் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேரி பார்ரா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பைடன் இதனை தெரிவித்தார்.
கலிபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று -ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களில், கலிபோர்னியாவில், கொரோனா வைரஸ் பரவல் இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கலிபோர்னியாவில் அதிவேகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசாம் தெரிவித்து உள்ளார்.
Next Story