அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் - டிரம்புக்கு நியூயார்க் ஆளுநர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி திட்டத்தை நியூயார்க் மாகாணத்தில் நிறுத்தி வைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் - டிரம்புக்கு நியூயார்க் ஆளுநர் எச்சரிக்கை
x
கொரோனா தடுப்பூசி திட்டத்தை நியூயார்க் மாகாணத்தில் நிறுத்தி வைத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ எச்சரிக்கை விடுத்து உள்ளார். நியூயார்க்கில் பேசிய அவர், டிரம்ப் நிர்வாகத்தின் தடுப்பூசி திட்டம் அனைவரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், டிரம்ப் தனது திட்டத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக, நியூயார்க்குக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு - இங்கிலாந்து பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில், கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனால், விதிமுறைகளின்படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டு உள்ளார். போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் குணமாகியது குறிப்பிடத்தக்கது.

"கோடைக்காலத்துக்கு முன்பே கொரோனா பரவியிருக்கிறது" - இத்தாலி புற்றுநோய் ஆய்வு நிறுவனம் தகவல்

கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இத்தாலி உள்ள நிலையில், அங்கு கோடைக்காலத்துக்கு முன்பாகவே கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மிலன் புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த பிப்ரவரி மாதமே, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் கொரோனா வைரசின் ஆண்டிபாடிகள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம், இத்தாலியில் கோடைக் காலத்துக்கு முன்பாகவே வைரஸ் பரவல் இருந்திருப்பது உறுதியாகி உள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்