அமெரிக்காவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய வேகம் எடுத்துள்ளதால் மாகாண அரசுக்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அமெரிக்காவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
x
கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்காவில் இதுவரையில் ஒரு கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  நவம்பர் 3 அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த 10 நாட்களாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டிச் செல்கிறது. கடந்த 13-ம் தேதி மட்டும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு புதியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றிருக்கும் நிலையில் புதிய ஊரடங்கை அமல்படுத்த விரும்பாத டிரம்ப், ஏப்ரல் 2021-க்குள் அனைவருக்கும் மருந்து கிடைத்துவிடும் என கூறியிருக்கிறார்.
 
இதற்கிடையே வரும் நாட்களில் பாதிப்பு அதிகமாகலாம் என மாகாண அரசுக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்துவதன், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வலியுறுத்தியுள்ளன.

மெரிலாண்ட் மாகாணத்தில் நட்சத்திர விடுதிகளில் விருந்து நிகழ்ச்சிகளில் 25 பேருக்கு அதிகமாக கூடக் கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாகாணங்களிலும், முக்கிய நகரங்களிலும் கட்டுப்பாட்டுக்கள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்