விண்வெளி மையம் செல்கிறது 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி ஓடம் - ஜப்பானியர் உள்பட 4 விண்வெளி வீரர்கள் பயணம்

ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் விண்வெளி ஓடம் மூலம் 4 வீரர்கள் நாளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.
விண்வெளி மையம் செல்கிறது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஓடம் - ஜப்பானியர் உள்பட 4 விண்வெளி வீரர்கள் பயணம்
x
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் ஏற்படும் செலவினை குறைக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரத்யேகமான விண்வெளி ஓடம் ஒன்றை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. எலான் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய இந்த விண்வெளி ஓடத்தில் முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்திரமாக தரையிறங்கினர். இதில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும், அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்வெளி ஓடத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வர்த்தக ரீதியாக தன்னுடைய விண்வெளி ஓட பயணத்தை தொடங்க விருக்கிறது. இதன் மூலம் நாளை 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் மூலமாக இந்த விண்வெளி ஓடம் அனுப்பப்படுகிறது. இதில் ஜப்பானை சேர்ந்த ஒரு விண்வெளி வீரரும், அமெரிக்காவை சேர்ந்த 3 வீரர்களும் பயணம் செய்ய உள்ளனர். கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்