பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் அமைச்சர் சந்திப்பு

2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரிப், பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் அமைச்சர் சந்திப்பு
x
2 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரிப்,  பிரதமர் இம்ரான் கான் மற்றும் வெளியுறவுத் துறை  அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார். அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஈரான் அமைச்சருடன் சென்றுள்ளனர். ஈரானின் சிஸ்தான் மாகாணம் மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லையில் உள்ள ரிமதான் நுழைவு வாயல், அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்சனை, குடி பெயர்தல், பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகள் பற்றி விவாதிக்க இரு நாடுகளும் கூட்டு செயற்குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஈரான் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் எல்லையோரம் பாகிஸ்தான் ஒரு முள் வேலியை அமைப்பதை வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவ தளபதியை, ஈரான்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஷரிப் சந்தித்து பேசி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்