பீட்ரூட் சிவப்பு நிறத்திற்கு மாறிய ஆறு - உலகிற்கு எச்சரிக்கை

ரஷ்யா நாட்டில் மர்மமான முறையில் ஆற்று நீரின் நிறம் சிவப்பாக மாறியிருப்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பீட்ரூட் சிவப்பு நிறத்திற்கு மாறிய ஆறு - உலகிற்கு எச்சரிக்கை
x
இஸ்கிதிம்கா என அழைக்கப்படும் இந்த ஆறு, ஆரம்பத்தில் நீல நிறத்தில் இருந்து, காலப்போக்கில் பீட்ரூட் சிவப்பு நிறத்தில் மாறியதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். திடீர் நிற மாற்றத்தால், இந்த ஆற்றில் வாத்துகள் நீந்த மறுக்கின்றன. தொழிற்சாலை கழிவுகள் அல்லது பாதாள சாக்கடை கழிவுகளால் இது நேர்ந்திருக்குமா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீர் மாசு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் ஆறு ஒன்றின் நிறம் மாறி இருப்பது உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்