தனிநபர் சுதந்திரம் - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி நடவடிக்கை

திருமணமாகாத ஆண்-பெண் இணைந்து வாழலாம் என இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்தது.
தனிநபர் சுதந்திரம் - ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி நடவடிக்கை
x
இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் தனிநபர் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் சட்டங்களில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அங்கு திருமணம் ஆகாத ஆண்-பெண் ஒன்றாக இணைந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபானங்களை வாங்கவும், வீட்டில் வைத்திருக்கவும் இனி லைசென்ஸ் பெற வேண்டாம் என்று சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும், குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஆண்கள் விசாரணையை தவிர்க்கலாம் என்ற நிலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, ஆண்கள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களில் ஷரியத் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டாம் என்றும் தங்கள் நாட்டு தனிநபர் சட்டத்தை பின்பற்றலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சட்டங்களை மேம்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பு  - உரிமையை பாதுகாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் சகிப்புத்தன்மை கொள்கை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டு அரசு இந்த சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. Next Story

மேலும் செய்திகள்