அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறார் கமலா ஹாரிஸ் - நிறவெறியை வென்ற கமலா ஹாரிஸின் வெற்றி கதை..

எதிலும் முதலிடம் என்பது எளிதான காரியமில்லை... ஆனால் அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து முதன்மையானவர் என்ற அடையாளத்துடன் அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறார், கமலா ஹாரிஸ்...
அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறார் கமலா ஹாரிஸ் - நிறவெறியை வென்ற கமலா ஹாரிஸின் வெற்றி கதை..
x
அமெரிக்காவில் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ளார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்.அவருடைய தாய் சியாமளா கோபாலன் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.  

புற்றுநோய் ஆராய்ச்சியாளரான சியாமளா கோபாலன் அமெரிக்கா சென்ற போது, ஜமைக்கா நாட்டை பொருளாதார வல்லுநரை திருமணம் செய்துக்கொண்டார். இருவருக்கும் 1964-ல் கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸ்,  தன்னுடைய பள்ளி நாட்களிலே அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். 

அங்கு மனித உரிமைகளுக்கான போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் அமெரிக்காவில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக செயல்பட தொடங்கினார். 

சட்டத்துறையில் தனக்கு முன்னால் இருந்த அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்தார்.2003-ம் ஆண்டு சான் பிரான்சிகோ மாவட்ட அட்டர்னி ஜெனரலாகி, இப்பதவியை பெற்ற முதல் ஆசிய அமெரிக்க கருப்பின பெண் என்ற சாதனையையும் தனதாக்கினார். 

அதிலிருந்து 7 ஆண்டுகளில் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனராலானார். இவ்வாறு முதன் முறை என்ற முத்திரையை பல நிலைகளில் பதித்தவர், அரசியலிலும் நுழைந்தார். முதல் ஆப்பிரிக்க அமெரிக்க  பெண், என்ற பெருமையுடன், அமெரிக்க செனட் சபையின் உறுப்பினராக இருக்கிறார்.  

தற்போது, துணை அதிபர் பதவிக்கான போட்டியில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார். துணை அதிபர் பதவிக்கான போட்டியில் கமலா ஹாரிஸ் என்ற அறிவிப்பு வெளியானதும், நிறத்தை அடிப்படையாக கொண்டு எழுந்த எதிர்ப்புகளே அவருடைய போராட்டங்கள் என்னவாக இருந்திருக்கும் என்பதை வெளிச்சப்படுத்தியது.

ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு பெரும் அவமானமாக அமையும் என்று அதிபர் டிரம்பே பேசினார். இதற்கு சற்றும் சளைக்காமல் நிறவெறிக்கு மருந்தே கிடையாது என பதிலடியை கொடுத்து டிரம்ப் வாயை அடைத்தார் கமலா...அமெரிக்காவில் நீதித்துறை, அரசு நிர்வாக விவகாரங்கள் துறை சார்ந்த கமிட்டிகளில் உறுப்பினராக அதிரடியாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸ்.... அமெரிக்காவில் அதிபாராக இருக்கும் தலைவர் உயிரிழக்கும் போதும், பதவி விலகும் போதும் துணை அதிபர் அப்பகுதிக்கான பொறுப்பை ஏற்பார். மேலும், செனட் சபைக்கும் தலைவராகவும் செயல்படுவார்.


Next Story

மேலும் செய்திகள்