"என் தாய் ஷியாமளா" - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)

அமெரிக்காவில், அதிபர் பதவியில் பெண்களின் வெற்றி தொடரும் என துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
என் தாய் ஷியாமளா - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)
x
அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். தமிழகத்தின் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் டெலாவரில் வெற்றி​ உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், துணை அதிபராக தாம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நல்ல எதிர்காலத்தை உருவாக்க பலம் உள்ளதாகவும் ஜனநாயகத்தின் கண்ணியத்தை அனைவரும் காப்பாற்றி உள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்காவில் நிலவி வரும் இன வெறியை அகற்றுவோம் என்றும், வலுவான அரசியல் அனுபவங்களை கொண்ட ஜோ பிடன், அடுத்த அதிபராக தேர்வானது அமெரிக்கர்களுக்கான பெருமை என்றும் அவர் குறிப்பிட்டார் மேலும் தமது தாயார் ஷியாமளா கோபாலனை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ், தாம் துணை அதிபராக ஆனதன் பெருமை குறித்து நினைத்து பார்த்திருக்க மாட்டார் என உருக்கத்துடன் கூறினார். தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், ஒரு பெண்மணியை துணை அதிபராக தேர்வு செய்யும் மிகப்பெரிய துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது என்றும் பெருமையுடன் கூறினார். தாம் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகி இருந்தாலும், இது கடைசியாக இருக்காது என்றும் இது துவக்கமே என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். வாக்களித்தாலும், பைடன் அனைவருக்குமான அதிபர் என்றும், தமக்கு வாக்களிக்காதவர்களுக்கு பணியாற்ற கடமைப்பட்டிருப்பதாக, வெற்றி உரையில் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியுடன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்