அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகிறார் கமலா ஹாரிஸ்
x
அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிசும் வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகி சாதனை படைத்து உள்ளார். மேலும் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், முதல் இந்திய வம்சாவளி மற்றும் கறுப்பினத்தை சேர்ந்த பெண் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

பைடனிடம் பேசி கமலா ஹாரிஸ் மகிழ்ச்சி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள ஜோ பைடனிடம் தொலைபேசி மூலம் பேசி கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரிடம் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்