"வெற்றியைத் திருட முயற்சிக்கிறார்கள்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் வெற்றியை தன்னிடமிருந்து திருட முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
வெற்றியைத் திருட முயற்சிக்கிறார்கள் - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வெற்றி பெற 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 264 இடங்களில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தேர்தலில் சட்டப்பூர்வமாக பதிவான வாக்குகளை எண்ணினால், தான் எளிதில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். வெள்ளை மாளிகையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்ட விரோதமாக பதிவான வாக்குகள் மூலம், ஜனநாயக கட்சியினர் வெற்றியை திருட முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், பல்வேறு மாகாணங்களில் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.

"பைடனை எதிர்த்து வழக்கு தொடர்வேன்" 

 முன்னதாக, டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த டிரம்ப், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக உரிமை கோரப்படும் மாகாணங்களில் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் இழுபறி - டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்


அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதிபர் டிரம்ப் மற்றும் பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நெவேடா மாகாணத்தில் நடந்து வரும் வாக்கு எண்ணும் பணிகளில் மோசடி நடப்பதாக கூறி, டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் வேகாஸ் நகரில் உள்ள வாக்குச் சாவடி முன்பாக குவிந்த அவர்கள், வாக்கு எண்ணும் பணி வேண்டுமென்றே தாமதம் ஆக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.

"நாங்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவோம்" - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதிபர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பைடனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், டெலவரர் மாகாணத்தில் பேசிய பைடன், தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரியவரும்போது, தாங்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவோம் என்று தெரிவித்து உள்ளார். மேலும் தனது கட்சி ஆதரவாளர்களை அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்