"அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம்" - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
x

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.  270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார். இழுபறியாக இருந்த ஃப்ளோரிடா, அயோவா, ஆகிய மாகாணங்களில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல், ஜார்ஜியா, மிக்சிகன், வட கரோலினா, பென்சில்வேனியா, ஆகிய மாகாணங்களில், அதிபர் டிரம்ப் முன்னிலை வகித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அரிசோனாவில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கடும் போட்டியை சந்தித்து வரும் நெவடா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடன், முன்னிலை வகிப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, வெள்ளை மாளிகையில், உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தலை அமெரிக்க மக்கள் மீதான மோசடி என புகார் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்