காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.
காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
x
ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். பல்கலைக் கழகத்தில் ஈரானிய புத்தக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, அரசு அதிகாரிகள் வருகை தர இருந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாதி திடீரென நுழைந்த சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், மாணவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூன்று பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்