அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்தால் மகிழ்ச்சியான நேரங்களை இழக்க வேண்டிய நிலை உருவாகும் - அதிபர் டிரம்ப்

ஜோ பிடனுக்கு வாக்களித்தால் அமெரிக்கர்கள் நன்றி அறிவிப்பு கொண்டாட்டங்கள் உள்பட அனைத்து நல்ல நிகழ்வுகளையும் இழக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் வாக்காளர்களை எச்சரித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்தால் மகிழ்ச்சியான நேரங்களை இழக்க வேண்டிய நிலை உருவாகும் - அதிபர் டிரம்ப்
x
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தீவி​ர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அரிசோனாவில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப், ஜோ பிடனுக்கு வாக்களித்தால்,   பள்ளிக்கு செல்வதை, பட்டம் பெறுவதை,  திருமணம், நன்றி அறிவிப்பு விழா, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , சுதந்திர தினம் என எல்லா மகிழ்ச்சியான தருணங்களையும்  கொண்டாட முடியாது என வாக்காளர்களை எச்சரித்துள்ளார். ஜோ பிடனின் திட்டங்கள் உங்களையும், உங்களின் குடும்பத்தினரையும் அழித்து விடும் என்றும் எச்சரித்துள்ள டிரம்ப், கொரோனா அழித்து,  நம்முடையா நாடு முன்பை விட வலிமை பெற சரியான அதிபர் தேர்தல் வேட்பாளர் தாம் தான் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வேலை இழப்புகள், ஊரடங்குகள், பெரும் துன்பங்களை உருவாக்குவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் ஜோ பிடன் என டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.  அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் செல்வம் பெருக நடவடிக்கை எடுக்க  தகுதியான வேட்பாளர் தாம் தான் என்றும், அளித்த வாக்குறுதிகளை விட அதிகமாக மக்களுக்கு செய்யும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் வாக்காளர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்