"டிரம்ப்பை வீட்டுக்கு அனுப்ப பிடனுக்கு வாக்கு அளியுங்கள்" -கமலா ஹாரிஸ்

முன்னாள் அதிபர் ஓபாமா கொண்டு வந்த மலிவு விலை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்ய முயற்சித்தவர் அதிபர் டிரம்ப் என கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
டிரம்ப்பை வீட்டுக்கு அனுப்ப பிடனுக்கு வாக்கு அளியுங்கள் -கமலா ஹாரிஸ்
x
லாஸ் வேகாஸ் பிரசாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும் உங்கள் வாக்குகள் மூலம் தான் டிரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். 
இதேபோல் தெற்கு கரோலினா மாகாணத்தில் பேசிய குடியரசு கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், அதிபர் டிரம்ப் விரைவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான கட்டணத்தை மேலும் குறைக்க வழிவகை செய்வார் என்றார். மேலும் அமெரிக்கா ஒரு போதும் சோசியலிசா நாடாக மாறாது என்று கூறிய அவர் கடந்த 3 ஆண்டுகளில் ராணுவத்தை பலப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டு எடுத்துள்ளோம் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்