அமெரிக்காவில் மற்றொரு கருப்பினத்தவர் சுட்டுக்கொலை - 30க்கும் மேற்பட்ட போலீசார் காயம்

அமெரிக்காவில் மற்றொரு கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மற்றொரு கருப்பினத்தவர் சுட்டுக்கொலை - 30க்கும் மேற்பட்ட போலீசார் காயம்
x
அமெரிக்கா மின்னபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிலாடெல்பியா நகரில் நடந்த போராட்டத்தில் 27 வயதான வால்டர் வாலஸ் என்ற கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் கையில் கத்தி வைத்திருந்ததாகவும், எச்சரிக்கை விடுத்தும் கத்தியை கீழே போட மறுத்ததால் சுட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்