ராமர் கோவிலுக்காக இலங்கையில் இருந்து வரும் அடிக்கல்

அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையில் இருந்து பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ராமர் கோவிலுக்காக இலங்கையில் இருந்து வரும் அடிக்கல்
x
அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையில் இருந்து பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கல், நுவரெலியாவில் உள்ள சீதா எலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட சிறப்பு கொண்டது. நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் மற்றும் ஆவாஎலிய ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் ஆகியவற்றில் வைத்து விசேச பூஜை செய்யப்பட்டது. இது, கொழும்பு அனுப்பப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்