800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது - போரினால் உறவுகளை இழந்தோர் கோரிக்கை

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என இலங்கையில் போரினால் உறவுகளை இழந்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது - போரினால் உறவுகளை இழந்தோர் கோரிக்கை
x
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிப்பதற்கு விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்றனர். 
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னை தமிழ்‌ இனத்திற்கு எதிரானவராக சித்தரிக்கப்படுகிறது என முரளிதரன் விளக்கம் அளித்தார். இருப்பினும் தொடர்ந்து விஜய் சேதிபதி இப்படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போரினால் உறவுகளை இழந்தவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், 800-ல் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதி படத்தில் இருந்து தன்னை விலகிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்