"கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தால் பலனில்லை" - உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்

கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தால்  பலனில்லை - உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்
x
கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ரெம்டெசிவிர், லோபினாவிர், ரிட்டோனாவிர் மற்றும் ஹைட்ரோ குளோரோகுயின் ஆகிய நான்கு மருந்துகள் குறித்து கடந்த ஆறு மாதமாக நடந்த ஆய்வில், அவை அனைத்தும் ‌கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்து இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் மூலம் இறப்பு விகிதம், நோயாளிகளின் உடல் நிலையில் முன்னேற்றம் போன்ற எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் 30 நாடுகளில் சேர்ந்த 11 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்த ஹைட்ரோ குளோரோகுயின் மருந்து கொரோனா சிகிச்சைக்கு ஏற்றதல்ல என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  ரெம்டெசிவிர் மருந்தை தனது சிகிச்சைக்கு  எடுத்துக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்