சீனா உடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் : கமலா ஹாரிஸ் Vs பென்ஸ் அனல் பறந்த விவாதம்

சீனா உடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து, துணை அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் அனல் பறந்தது.
சீனா உடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் : கமலா ஹாரிஸ் Vs  பென்ஸ் அனல் பறந்த விவாதம்
x
சீனா உடனான வர்த்தக போரில் அமெரிக்கா தோல்வி அடைந்துவிட்டதாக கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார்.  

ஆனால் இதை மறுத்த மைக் பென்ஸ், வர்த்தக போரில் சீனாவிடம் தோற்றோம் என்பது உண்மை அல்ல என்றார்.

டிரம்பின் நடவடிக்கையால் ஏராளமான இழப்பு ஏற்பட்டதோடு, அமெரிக்காவுடன் நட்புடன் இருந்த நாடுகள் சீனாவிடம் நெருக்கம் காட்டுவதாக கமலாஹாரிஸ் விமர்சித்தார்.

நட்பு நாடுகளுடனான நமது உறவு சுமூகமாக இருப்பதாக மைக் பென்ஸ் பதிலளித்தார். 

அமெரிக்க ராணுவத்தை டிரம்ப் மரியாதை குறைவாக பேசி வருகிறார் என்ற கமலா ஹாரிஸின் குற்றச்சாட்டை மறுத்த பென்ஸ்,

ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குபவர் டிரம்ப் என பதிலளித்தார்.

ரஷ்ய ராணுவம் அமெரிக்க வீரர்களை பந்தாடும் விவகாரத்தில் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை என கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார். 

ராணுவ விவகாரத்தில் டிரம்ப் மீதான விமர்சனத்தை ஏற்க முடியாது என பென்ஸ் தெரிவித்தார். 

ஈரான் தளபதி, பின்லேடன் மீதான தாக்குதலை ஜோ பிடன் விமர்சித்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய பென்ஸ், 

டிரம்ப் அரசு தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதாக உறுதிபட கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்