அமெரிக்க அரசியலும்...கருப்பின போராட்டமும்...

அமெரிக்க அரசியலில் கருப்பின மக்கள் உரிமைகள் சார்ந்த போராட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது
அமெரிக்க அரசியலும்...கருப்பின போராட்டமும்...
x
அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சனைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்க அதிபர்  தேர்தல்களிலும் இந்த பிரச்சனையின் தாக்கம் தொடர்கிறது.

கருப்பின மக்களுக்கு, ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சியின் போது தான் அடிமைத் தளையில் இருந்து விடுதலை மற்றும் வாக்குரிமைகள் அளிக்கப்பட்டது. ஆனால் 1960கள் வரை, பொது இடங்கள், பொதுப் போக்குவரத்தில், பொதுப் பள்ளிகளில் கருப்பினத்தவர்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டனர். 

பொதுவாக ஜனநாயக கட்சியினர் கருப்பினத்தவர்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும்  என்ற முற்போக்கான நிலைபாட்டை கொண்டவர்கள். ஆனால் குடியரசுக் கட்சியின் இதற்கு மாறாக, கருப்பினத்தவர்களுக்கு சம உரிமைகள் அளிக்கப்படக் கூடாது என்ற நிலைபாட்டை கொண்டவர்கள்.

1961இல் மிக இளம் வயதில் அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த, ஜான் எப் கென்னடியின் ஆட்சியில், கருப்பின் மக்கள் உரிமைகளுக்கான போராட்டங்கள் வேகம் பிடித்தன. கருப்பின மக்களின் உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் காந்திய முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. 

ஜான் எப் கென்னடியின் இளைய சகோதரர் ராபர்ட் கென்னடி, அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார். கென்னடி சகோதர்கள் கருப்பின மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். 

அலபமாவில் ஒரு சர்ச்சில் நடைபெற்ற கூட்டத்தில் மார்டின் லூதர் கிங் பேசிய போது, அந்த சர்ச்சை ஒரு வெள்ளையின நிறவெறி கொண்ட கும்பல் தாக்கியது. உடனடியாக அவரை காப்பாற்ற, அமெரிக்க தேசிய காவல் படையினரை ராபர்ட் கென்னடி அங்கு அனுப்பி, அந்த கும்பலைக் கலைந்து போகச் செய்து, மார்டின் லூதர் கிங்கை காப்பாற்றினார். 

1964இல் மார்டின் லூதர் கிங்கிற்கு சமாதனத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1968 - இல் மார்ட்டின் லூதர் கிங்கை ஒரு வெள்ளையின வெறியன் சுட்டுக் கொன்றான். 

கருப்பினத்தவர்களுக்கு பொது இடங்களில், பள்ளிகளில் சம உரிமை அளிக்க, அமெரிக்க  நாடாளுமன்றத்தில் பல சீர் திருத்த சட்டங்களை நிறைவேற்ற கென்னடி சகோதர்கள் வகை செய்தனர். 

1963இல் ஜான் எப் கென்னடியும், 1968இல் ராபர்ட் கென்னடியும், அரசியல் காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜான் எப் கென்னடியின் ஆட்சியில்  துண் அதிபராக  இருந்த லின்டன் ஜான்சன், அதிபராக  பதவியேற்றார். 

அவரது  ஆட்சியில், 1964 - இல் கருப்பின மக்களுக்கு முழுமையான உரிமைகளை வழங்கும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவில் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

ஆனால் இவை இன்னும் முழுமையாக நிறைவேற்றப் படாததால், இன்று வரை கருப்பின மக்களின் உரிமைகளுகான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. 

1970களில் தொடங்கி 80களில் படிப்படியாக கருப்பின மக்களின் நிலை உயரத் தொடங்கியது. ராணுவம், அரசு, தனியார் நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் உயர் பதவிகளில் பல கருப்பினத்தவர்கள் அமர்ந்தனர். 

இறுதியாக 2008 அமெரிக்க அதிபர்  தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரக் ஒபாமா வெற்றி பெற்று, அமெரிக்காவின் முதல் கருப்பினத்தை சேர்ந்த அதிபரானார் ..  

கருப்பின மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களாக தொடர்வதால், வரும் நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில், ஜோ பிடனுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்