கொரோனா தடுப்பு மருந்து விவகாரம்:"டிரம்பின் பேச்சை நம்ப வேண்டாம்" - அமெரிக்கர்களுக்கு ஜோ பிடன் கோரிக்கை

கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் அதிபர் டிரம்பின் பேச்சை நம்ப வேண்டாம் என்று அமெரிக்க மக்களை, ஜோ பிடன் கேட்டுக் கொண்டுள்ளார்
கொரோனா தடுப்பு மருந்து விவகாரம்:டிரம்பின் பேச்சை நம்ப வேண்டாம் - அமெரிக்கர்களுக்கு ஜோ பிடன் கோரிக்கை
x
அமெரிக்க அதிபர்  தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது, கொரோனா தடுப்பு நோய் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று டிரம்ப் கூறியிருப்பதை கடுமையாக மறுத்தார். அமெரிக்க மக்கள் டிரம்பின் பேச்சை நம்பக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். சில வாரங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்து உருவாக்கப்படும் என்று சொல்வது பகுத்தறிவுக்கு முரணானது என்று பிடன் குறிப்பிட்டார் .  டிரம்ப் அரசின் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனரான ராபர்ட் ரெட்பீல்ட், கொரோனா தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு  மத்தியில் தான் தயாராகும் என்று அறிவித்திருப்பதை ஜோ பிடன் சுட்டிக் காட்டினார். தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெறும் நோக்கத்தில் ட்ரம்ப் இந்த பிரச்சனையின் தீவிரத்தை மறைத்தார் என்றும்  நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறினார் என்று ஜோ பிடன்  குற்றம் சாடிடனார் .  பெரும் செல்வதந்தர் குடும்பத்தில் பிறந்த டிரம்ப்பிற்கு சாதாரண மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் ஜோ பிடன் வேதனை தெரிவித்தார் 

Next Story

மேலும் செய்திகள்