"பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவோம்" -அக். 15 வரை காலக்கெடு என போரீஸ் ஜான்சன் எச்சரிக்கை

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் விவகாரத்தில், பேச்சு வார்த்தைகள் மூலம் அக்டோபர் 15க்குள் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், பேச்சு வார்தைகளில் இருந்து பிரிட்டன் விலகும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவோம் -அக். 15 வரை காலக்கெடு என போரீஸ் ஜான்சன் எச்சரிக்கை
x
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அரசியல் ரீதியாக ஜனவரி 31இல் வெளியேறியது. பொருளாதார ரீதியாக டிசம்பர் 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றுபட்ட சந்தை மற்றும் சுங்க வரி அமைப்பில் இருந்து வெளியேற உள்ளது.  இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகள் பாதிப்படையாத வகையில் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாமல், பல வாரங்களாக தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 15க்குள்  சுமுகமான ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், பேச்சு வார்தைகளில் இருந்து பிரிட்டன் விலகும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். அப்படி வெளியேறுவது பிரிட்டனுக்கு நன்மையை அளிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஒப்பந்தம் எதுவும் ஏற்படாவிட்டால், ஜனவரி ஒன்றாம் தேதி முதல், பிரிட்டனின் துறைமுகங்களில் சரக்குகள் தேங்கி, இறக்குமதி, ஏற்றுமதி வர்தகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று பிரட்டனின் சரக்கு  போக்குவரத்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்