டிரம்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிக்கி ஹாலி - 2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிம்பிற்கு ஆதரவாக ஐ.நா சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி குரல் கொடுத்திருக்கிறார்.
டிரம்பிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிக்கி ஹாலி - 2024 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக வாய்ப்பு
x
 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பளாரக,  ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸை எதிர்த்து நிக்கி ஹாலி களமிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. நிக்கியின் பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். குடியரசு கட்சியின் மாநாட்டில் பேசிய நிக்கி ஹாலி, கொரோனா பாதிப்பிற்குள்ளான அமெரிக்க பொருளாதாரத்தை அதிபர் டிரம்ப் மீட்டெடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனது தந்தை சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையை அணிந்தார் என்றும், தாயார் புடவை உடுத்தியவர் என்றும் பேசிய அவர், தான் ஒரு இந்திய வம்சாவளி என்பதில் பெருமை கொள்வதாக கூறினார். தெற்கு காரோலினா மாநிலத்தின் முதல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆளுநராக மக்கள் தம்மை தேர்வு செய்ததை சுட்டிக் காட்டி, அமெரிக்கா இந்த இன நல்லிணக்கத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்