அமெரிக்க தேர்தல் அரசியல் - தலையிட விருப்பம் இல்லை என சீனா பதிலடி

அமெரிக்க தேர்தல் அரசியலில் தலையிட விருப்பம் இல்லை என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க தேர்தல் அரசியல் - தலையிட விருப்பம் இல்லை என சீனா  பதிலடி
x
அமெரிக்க தேர்தல் அரசியலில் தலையிட விருப்பம் இல்லை என்றும், அத்தகைய நடவடிக்கை எதிலும் தற்போது ஈடுபடவில்லை என்றும், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனாவை இழுக்கும் வேலையை அந்நாடு கைவிட வேண்டும் எனவும், அமெரிக்காவின் நன்மதிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும், சீனா மீது தேவையில்லாமல் பழிபோடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் ஷாவ் லிஜியான் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க தேர்தல் களத்தில் குழப்பத்தை உருவாக்க சீன முயலுவதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்திருந்த கருத்துக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்