அமெரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில், 55 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில், 55 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புளோரிடா மாகாணத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து 3வது நாளாக, ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 31 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
Next Story