"கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது" - உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

கொரோனா வைரசின் மிகமோசமான தாக்கம் இனிதான் ஏற்படப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது - உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை
x
கொரோனா வைரசின் மிகமோசமான தாக்கம் இனிதான் ஏற்படப்போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் உலகெங்கிலும் சுமார் 1 கோடி பேருக்கு மேல் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை என கவலை தெரிவித்தார். தற்போது இருப்பதைக் காட்டிலும், வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணிகளோடு அது உருவாகிய இடத்தை கண்டறிவதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பவிருப்பதாகவும் அதோனெம் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்